சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசுகள் குறைப்பு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைத்து விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருவதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விலை நிர்ணயத்தின் அடிப்படையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 7 காசுகள் குறைந்து லிட்டர் 74 ரூபாய் 01 காசுக்கும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 22 காசுகள் குறைந்து லிட்டருக்கு 69 ரூபாய் 36 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version