சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 19 காசுகள் குறைப்பு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைத்து விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து 74 ரூபாய் 08 காசுகளுக்கும், டீசல் நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 40 காசுகள் குறைந்து 69 ரூபாய் 58 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version