சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் அதிகரித்து, 76 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 31 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் 26 காசுகள் அதிகரித்து, 70 ரூபாய் 33 காசுகளுக்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் பேரலுக்கு 5 டாலர் 80 செண்ட்கள் குறைந்து 58 டாலர் 61 செண்ட்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version