மத்திய பட்ஜெட் எதிரொலி: சென்னையில் c-டீசல் விலை ரூ.2 உயர்வு

மத்திய நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசலுக்கான வரி உயர்த்தப்பட்டத்தை தொடர்ந்து அவற்றின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதாவது, நெடுஞ்சாலை வரி, உற்பத்தி வரி, உள்ளூர் வரிகளை சேர்த்து 2 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயரும் என கணிக்கப்பட்டது.

இந்தநிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்து 75 ரூபாய் 17 காசுகளாகவும், டீசலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 52 காசுகள் அதிகரித்து, 70 ரூபாய் 48 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நான்கு நாட்களுக்கு பிறகும் டீசலின் விலை 5 நாட்களுக்கு பிறகும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version