பெனின் நாட்டுக்கு ரூ.687 கோடி கடனுதவி: ராம்நாத் கோவிந்த்

மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினுக்கு சுமார் 687 கோடி ரூபாய் கடனுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக இந்தியா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலாவதாக பெனின் நாட்டுக்கு சென்றார். கோடோனோ நகரிலுள்ள அதிபர் மாளிகையில், முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அந்நாட்டு அதிபர் பேட்ரிஸ் டலோனுடன், ராம்நாத் கோவிந்த் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, கலாசாரப் பரிமாற்றம், ஏற்றுமதியில் ஒத்துழைப்பு, முதலீட்டு காப்பீடு, இந்திய தூதரக அதிகாரிகளுக்கு விசா விலக்கு உள்ளிட்டவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராம்நாத் கோவிந்த் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக அதிபர் பேட்ரிஸ் டலோனுடன் விரிவாக ஆலோசித்ததாக கூறினார்.

பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்த இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளதாக கூறிய அவர். பெனின் நாட்டில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக, சுமார் 687 கோடி ரூபாய் கடனுதவியை இந்தியா படிப்படியாக வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version