ஆசிரியர் தினம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்துகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்து தெரிவித்துள்ளார். நாட்டை சிறப்பாக கட்டமைக்க ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் எனவும் நாட்டின் மிக சிறந்த ஆசிரியரான டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு, அவரது பிறந்த நாள் அன்று நாடு மரியாதை செய்கிறது என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version