சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டது.

விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், வேளாண் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று வேளாண் சட்டங்கள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பின் மூலம் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்கள், அரசிதழில் வெளியிடப்பட்டன. இதேபோல், ஜம்மு காஷ்மீர் அலுவல் மொழி சட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Exit mobile version