குறைந்தபட்ச ஆதாரவிலை முன்பைப் போலவே தொடரும் – பிரதமர் மோடி உறுதி

புதிய வேளாண் சட்டங்கள், விவசாயிகளுக்கு தங்களது விளை பொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய அதிகாரம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் 9 தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய வேளாண் சட்டங்கள் விவசாய சந்தைகளுக்கு எதிரானது அல்ல என்பதை தெளிவுப்படுத்த விரும்புவதாக கூறினார்.

வேளாண்மை துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்ற நிலையில் விவசாயிகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை கொண்டுவரும் புதிய வேளாண் சட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளதாகவும், இதற்காக விவசாயிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும், குறைந்தபட்ச ஆதாரவிலை முன்பைப் போலவேத் தொடரும் என விவசாயிகளுக்கு உறுதி அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

Exit mobile version