சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!

சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷிகுமார் சுக்லா கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, இடைக்கால இயக்குநராக கூடுதல் இயக்குநர் பிரவீண் சின்ஹா பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சிபிஐ புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இன்று இரவு 7 மணிக்கு கலந்து ஆலோசிக்க உள்ளனர். பிரதமர் இல்லத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் இருந்து புதிய சிபிஐ இயக்குநர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1984 ஆண்டின் ஐபிஎஸ் அதிகாரியும், தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநராக உள்ள ஒய்.சி.மோடி, புதிய சிபிஐ இயக்குநராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version