முழு ஊரடங்கு எதிரொலி – நஷ்டத்தில் தர்பூசணி விவசாயிகள்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கால், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விளைந்துள்ள தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் வராததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொத்தட்டை, சின்னகொமட்டி, பெரியகொமட்டி, அரிராஜபுரம் உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்ட பகுதியில் 100 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பழங்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அரசு அறிவித்துள்ள தளர்வுகளற்ற ஊரடங்கால், பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளது. இதனால் பழங்கள் வயலில் அழுகும் சூழலை தவிர்க்க அரசு தோட்டக்கலை துறை மூலமாக பழங்களை கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version