வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில், வேளாண் சட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 நாள்களுக்குள் விவசாயிகள் விற்றப் பொருட்களுக்கு உரிய தொகை கிடைத்துவிடும் எனத் தெரிவித்தார். வேளாண் விளை பொருள்களை விற்பதற்கு முந்தைய சட்டத்தில் பல்வேறு கட்டுபாடுகள் இருந்ததாக கூறிய அவர், தற்போது கட்டுபாடுகள் நீக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டிஜிட்டல் முறையில் விற்பனை செய்பவர்களுக்கு வரி கிடையாது என்பதே இச்சட்டத்தின் சிறப்பு அம்சம் எனக் குறிப்பிட்டார்.

Exit mobile version