தனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன -மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

வேளாண் மசோதா குறித்து அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கூறி, விவசாயிகளை காங்கிரஸ் திசை திருப்புவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

வேளாண் மசோதா தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், விவசாயிகள் விளை பொருள்களை எங்கு விற்பனை செய்ய விரும்புகிறார்களோ அதைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ளார். விவசாய உற்பத்தி சந்தைக் குழு அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், அவற்றை மூடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று கூறினார்.

தனிப்பட்ட லாபங்களுக்காக வேளாண் மாசோதாவை காங்கிரஸ் உள்பட சில எதிர்கட்சிகள் எதிர்ப்பதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் சிலரின் அழுத்தம் காரணமாக மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், நரேந்திர சிங் தோமர் குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version