ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு நிராகரிப்பு

டெல்லியில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தலைமை தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். ஆதாயம் பெறும் வகையில், இரட்டைப் பதவி வகித்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. எனினும் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.

Exit mobile version