பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் நாட்டில் 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். மணிலாவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வந்து செல்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். அதன் பின் குயிசான் என்னும் நகரில் மிரியம் கல்லூரி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தியின் மார்பளவு உருவச் சிலையைத் திறந்து வைத்தார்.

Exit mobile version