விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

விவசாயிகளின் வருமானத்தை பெருக்க, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியா முழுவதும் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வந்தன. தமிழக அரசு ஒருபடி மேலே சென்று, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது.

Exit mobile version