தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துடன் ரஜினி சந்திப்பு

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அண்மையில் வீடு திரும்பினார். இதையடுத்து அவரை முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை காண, அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். ரஜினிகாந்தை விஜயகாந்தின் இளையமகன் சண்முக பாண்டியன் மற்றும் சுதீஷ் ஆகியோர் வரவேற்றனர்.

விஜயகாந்த் உடனான சந்திப்பில் துளி அளவு கூட அரசியல் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, தன்னை வந்து முதலில் பார்த்தவர் விஜயகாந்த் எனத்தெரிவித்தார்.

Exit mobile version