அயோத்தி திரைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து..!

அயோத்தி திரைப்படமானது மார்ச் மாதம் 3 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் திரையரங்கில் வெளியாகியது. மக்கள் மத்தியில் பெருத்த ஆதரவைப் பெற்ற இத்திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகியும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மதநல்லிணக்கம் என்கிற ஒன் லைன் ஸ்டோரியைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட முயற்சி வீண் போகமல் அனைத்து தரப்பினரையும் இத்திரைப்படம் கவர்ந்துள்ளது.

இத்திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிவிட்டரில் தன்னுடைய பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.  அவருடைய டிவிட்டர் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி…

நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம்.

முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர். மந்திரமூர்த்தி.

தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

இவ்வாறு ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

Exit mobile version