அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? – இன்னும் தெளிவடையாத ரஜினி

 நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளோடு நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசிவருகிறார். தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த பின் முதல்முறையாக சந்திப்பு நடைபெறுகிறது. மக்கள் மன்றத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் , புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், ரஜினி மக்கள் மன்றத்தை மீண்டும் ரசிகர் மன்றமாக மாற்ற சில நிர்வாகிகள் கோரிக்கை வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அரசியல் சார்ந்த விஷயங்கள் பேசப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் மன்றத்தை தொடரலமா? வேண்டாமா? அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சி குறித்து இந்த கூடத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா? எனவும் யோசித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version