மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அவ்வப்போது அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்லாமல் இருந்தார். தற்போது, அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், அங்கு சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ள அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் ரஜினி கேட்டிருந்தார். இதற்கான அனுமதி கிடைத்ததை அடுத்து, ரஜினிகாந்த் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு, மூன்று வாரங்கள் தங்கியிருக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version