அழுகிய வெங்காயத்தை இலவசமாக தந்த ரஜினி ரசிகர்கள்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்காக நலத்திட்ட உதவி வழங்குவதாக கூறி, அவரது ரசிகர்கள் அழுகிய வெங்காயத்தை வழங்கியதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவிலில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு, ஒரு கிலோ வெங்காயமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இலவச வெங்காயத்தை வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, முதியவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

Exit mobile version