பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி-கமலுக்கு அழைப்பு

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினி மற்றும் கமல் ஹாசனுக்கும் பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

30 ஆம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“தர்பார்” படப்பிடிப்புக்காக நாளை மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து பதவி ஏற்பு விழாவுக்கு செல்வார் என கூறப்படுகிறது. இதேபோன்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version