சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும்: விசாரணை ஆணையத்திடம் விலக்கு கேட்டு ரஜினி மனு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் முன்பு, வரும் 25ம் தேதி, ரஜினிகாந்த் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் ஆஜராக இயலாது என ரஜினிகாந்த் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், வரும் 25ம் தேதி திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகுமாறு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு, அரசியல் நிலையை கருத்தில் கொண்டு, வரும் 25ம் தேதி ஆணையம் முன்பு ஆஜராக இயலாது என ரஜினிகாந்த் தரப்பில், விசாரணை ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பரிசீலனை செய்து முடிவு செய்வதாக ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version