நாட்டின் 72வது சுதந்திர தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். இந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவுடன், சுதந்திர தினம் வருவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக அவர் தெரிவித்தார். காந்தி இந்தியாவின் அடையாளம் என்றும், அவரது சுதேசி கொள்கை இன்றைய காலகட்டத்திலும் பொருத்தும்படியாக உள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் கூறினார். இதுபோன்ற நேரத்தில், சர்ச்சைக்குரிய விஷயங்களிலும், தேவையற்ற விவாதங்களிலும் நம்மை திசைதிருப்ப, அனுமதிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். தனது பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடனும், உண்மையுடனும் செய்யும் ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர போராட்ட மாண்புகளை கட்டிக்காப்பதற்கு சமம் என்று அவர் கூறினார்.
தேவையற்ற விவாதங்கள் நம்மை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது -குடியரசுத் தலைவர் உரை
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா
- Tags: குடியரசுத் தலைவர் உரைராம்நாத் கோவிந்த்
Related Content
சட்டமாகின வேளாண் மசோதாக்கள் - குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது
By
Web Team
September 27, 2020
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு நிராகரிப்பு
By
Web Team
November 6, 2019
விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தமிழக அரசு புதிய சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
By
Web Team
October 30, 2019
பிலிப்பைன்சில் மகாத்மா காந்தி சிலையைத் திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்
By
Web Team
October 20, 2019
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்
By
Web Team
August 7, 2019