நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
17-வது மக்களவை தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. முதல் இருநாட்கள் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு எம்.பிக்களாக மக்களவை தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனையடுத்து பாஜக சார்பில் மக்களவை தலைவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வானார். இந்தநிலையில் இன்றைய தினம் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதன் பிறகு அனைத்து கட்சி எம்.பிக்களுக்கும் டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர உணவகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இரவு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி எம்.பிக்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.