குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவியேற்று இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நாட்டின் 14-வது குடியரசு தலைவராக பொறுப்பு வகித்து வரும் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய பதவி காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாளிகையாக குடியரசு தலைவர் மாளிகையை மாற்றியுள்ளார்.
பதவியேற்ற உடனே குடியரசு தலைவர் மாளிகையை, பொதுமக்கள் பார்வைக்காக வாரத்தில் நான்கு முறை திறந்து விட்டது. ஜூலை 25 ஆம் தேதியில் இருந்து இன்று வரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு விருந்தளித்துள்ளார். ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள், தீயணைப்பு துறை வீரர்கள் என நாள் ஒன்றுக்கு 23 பேரை சந்திப்பதே குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழக்கமாக கொண்டுள்ளார்.
பேப்பர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அலுவலக முடிவுகள் மற்றும் பணிகளில் முழுவதும் டிஜிட்டல் முறைக்கு மாற்றியுள்ளார்.