இருளர் மக்களுக்காக தரமற்ற முறையில் கட்டப்பட்ட வீடுகள்!

காட்டாங்குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பழவேலி பகுதியில் வசித்துவரும் இருளர் குடும்பத்திற்கு 3 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வீடுகள் கட்டப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர் த.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ஆனால் கட்டிடங்கள் போதிய அளவு தண்ணீர் ஊற்றி வலுப்படுத்தாததாலும், குறைந்த அளவில் சிமெண்ட் கலவையை பயன்படுத்தி கட்டியதால் இரண்டு ஆண்டுகளில் வீடுகள் சேதமடையும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், மின்சாரம், குடிநீர், சாலை போன்ற எந்த வசதிகளும் செய்யப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரமற்ற வீடுகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version