பொங்கல் பண்டிகையை ஒட்டி, மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீரூடை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தாண்டு மூவாயிரத்து 186 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை 1,500 பதக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த எண்ணிக்கை மூவாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகர்கள் நடைபெறும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதேபோல், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் என ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கமும் வழங்கப்படவுள்ளது.
Discussion about this post