பாகிஸ்தான் ஊடுருவலை தடுக்க காவல் படை தயார் நிலையில் உள்ளதாக ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங் தெரிவித்துள்ளர்.
இந்தியாவில் ஊடுருவும் முயற்சியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அடிக்கடி மீறி வருகிறது. இந்த ஊடுருவலை தடுக்க எந்தவொரு சவாலையும் தாங்கள் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஜம்மு மண்டல ஐ.ஜி. முகேஷ் சிங், சம்பா மாவட்ட செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
விசாரணையின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்துமாறும் அவர் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.