ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமல், மத்திய கிழக்காசிய நாடுகள் வழியாக செல்கிறார்.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்நிலையில், அம்மாநாட்டில் கலந்துகொள்ள, பாகிஸ்தான் வான்வெளியில் பயணித்தால் 4 மணி நேரம் 10 நிமிடத்தில் கிர்கிஸ்தான் சென்று விடலாம் என்பதால், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில், பாகிஸ்தானிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு பாகிஸ்தானும் அனுமதி கொடுத்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமல், ஓமன், ஈரான், மத்திய ஆசிய நாடுகள் வழியாக கிர்கிஸ்தான் செல்கிறார். இதனால் பிரதமரின் பயணநேரம் 8 மணிநேரம் ஆகும் எனத் தெரிகிறது.