திருச்சியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிதி உதவி அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தயம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த செய்தியையும், 12 பேர் காயம் அடைந்த செய்தியையும் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்ச ரூபாய் நிதிஉதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்த 12 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், துறையூர் கோவில் திருவிழாவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை வழங்க பிரதமர் உத்தர விட்டுள்ளார்.
Discussion about this post