சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைப்பு

சென்னையில் இன்று பெட்ரோல் விலை குறைந்தும் டீசல் விலை அதிகரித்தும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்நிலையில், கடந்த சில தினங்களாக விலை குறைந்து விற்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை குறைந்தும் டீசல் விலை அதிகரித்தும் பெட்ரோல் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்துள்ளன. பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு 73 ரூபாய் 79 காசுகளுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து, 6 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69 ரூபாய் 72 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Exit mobile version