சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசுகள் அதிகரிப்பு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று அதிகரித்து காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று அதிகரித்து நிர்ணயித்துள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 28 காசுகளுக்கும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 69 ரூபாய் 57 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Exit mobile version