சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை இன்று உயர்வு

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 73 ரூபாய் 19 காசுகளாக உள்ளது.

இதேபோல டீசல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 68 ரூபாய் 07 காசுகள் ஆகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Exit mobile version