பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு

பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14ஆம் தேதிக்குள் இம்ரானின்  தெஹ்ரிக் இ இன்சாப்  கட்சி , பதவியேற்பு விழாவை  நடத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளது.  பிரதமர்   மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் தெஹ்ரிக் இ இன்சாப்  கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  இதனிடையே, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இந்தி நடிகர்  அமீர்கான் ஆகியோருக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க முடியாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க உள்ளது.

Exit mobile version