பாகிஸ்தானின் சுதந்திர தினமான, வரும் 14ஆம் தேதிக்குள் இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி , பதவியேற்பு விழாவை நடத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கும் அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி, அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க முடியாததால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க உள்ளது.
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு
-
By Web Team
- Categories: உலகம்
- Tags: பாகிஸ்தான்பிரதமர் மோடி
Related Content
தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!
By
Web Team
November 16, 2020
உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
By
Web Team
October 3, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
By
Web Team
October 2, 2020
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? - பிரதமர் மோடி கேள்வி
By
Web Team
September 26, 2020
இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
By
Web Team
September 26, 2020