பாகிஸ்தான் அரசுக்கு எதிராக லண்டனில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளை பாகிஸ்தானியர்கள் கிழித்தெறிந்தனர்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் பலோச் சமூகத்தினர் தங்களின் உரிமை மறுக்கப்படுவதால், தனி நாடு கோரி போராடி வருகின்றனர். இதன் காரணமாக அந்நாட்டு அரசினால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு பலோச் சமூகத்தினர் உள்ளாக்கப்படுகின்றனர்.
சமூகத்தின் உரிமைக்காக போராடும் தலைவர்கள் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்த பிரச்சனையில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் லண்டன் நகரில் பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்திற்கு வெளியே பலோச் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானியர்கள், அங்கு வைக்கப்பட்டு இருந்த பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பதாகைகளை கிழித்தெறிந்தனர்.