ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மரியம் ஷெரீப் ஆகியோர் கடந்த 14ஆம் தேதி லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா (Adiala) சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில், நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிறையிலேயே அவரக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரை மீண்டும் சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. முதலில் சிறைக்கு செல்ல விரும்பாத நவாஸ் ஷெரிப், அவரது மகள் மற்றும் மருமகனின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரிப் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைப்பு
-
By Web Team
- Categories: உலகம்
- Tags: நவாஸ் ஷெரிப்பாகிஸ்தான்பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
Related Content
பாக். நிலைகள் மீது இந்தியா ஏவுகணைத் தாக்குதல்: வீடியோ வெளியானது
By
Web Team
March 6, 2020
சிஏஏ விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய இளம்பெண்
By
Web Team
February 21, 2020
இந்தியாவிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்: பாக். அரசுக்கு, மாணவர்கள் அறிவுரை
By
Web Team
February 7, 2020
இந்தியாவிடம் இருந்து 'போலியோ அடையாள மை' வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் முடிவு
By
Web Team
December 28, 2019
தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்
By
Web Team
November 7, 2019