பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், பாகிஸ்தான் தன்னைத் தானே அழித்துக் கொள்வதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல், நமது அண்டை நாடு பயங்கரவாதத்துக்கு நிதியுதவியும், பயிற்சியும் அளிக்கிறது என்று கூறினார். இதனால், மனிதநேயத்துக்கு மட்டுமல்லாமல், அந்த நாடு தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக் கொள்வதை உணரவில்லை என்று குறிப்பிட்டார். இந்தியா எப்போதும் அனைத்து நாடுகளுடனும் நட்பு பாராட்டவே விரும்புவதாகவும், அதே நேரத்தில், இந்தியாவுக்கு எவரேனும் தீங்கு விளைவித்தால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாகிறது என்றும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஆதரித்து, அவற்றுக்கு அடைக்கலம் தந்து, பயிற்சி அளிக்கும் எந்த நாட்டையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய வெங்கையா நாயுடு, இந்தியா வலுவான நாடாக உருவெடுக்க நாட்டு மக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.