பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கைது

போலியான வங்கிக் கணக்குகள் வைத்திருந்த வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை, அதிபராக இருந்தவர் ஆசிப் அலி ஜர்தாரி. இவரது மனைவி முன்னாள் பிரதமர் பெனாஷீர் பூட்டோ ஆவார். இந்நிலையில் ஏராளமான போலி வங்கி கணக்குகளை வைத்து, சுமார் 150 மில்லியன் பணப் பரிமாற்றம் செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தநிலையில், ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தானின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ஆசிப் அலி ஜர்தாரியை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஆஷிப் அலி ஜர்தாரியின் சகோதரி, பர்யால் தால்பூர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version