இந்தியர் குல்பூஷன் ஜாதவுக்கு, சர்வதேச நீதிமன்ற உத்தரவுபடி இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து பேச, அனுமதி வழங்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், மூன்றாண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தான் உளவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அதையடுத்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதை எதிர்த்து, இந்திய தரப்பில், சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், கடந்த 17 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. குல்பூஷன் ஜாதவ் மீதான தண்டனையை, பாகிஸ்தான் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இந்திய தூதரக அதிகாரிகள், அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், குல்பூஷன் ஜாதவை, இந்திய தூதரக அதிகாரிகள் சந்திப்பதற்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.