காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 5 நாள் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவு

காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக 5 நாள் தண்ணீர் திறந்துவிட, கர்நாடகாவிற்கு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன் குமார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக பொதுப்பணித் துறை செயலாளர் பிரபாகரன், திருச்சி மண்டல பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய 9.2 டிஎம்சி மற்றும் 31.2 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விடாத நிலையில், கூட்டத்தில், இந்த பிரச்சனையை தமிழக அதிகாரிகள் எழுப்பினார்கள்.

இதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய 45.93 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவை தமிழகம் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், காவிரியிலிருந்து, தமிழகத்திற்கு கூடுதலாக 5 நாட்கள் தண்ணீர் திறந்துவிட, ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version