சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜின் மறைவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளருமான கனகராஜ், காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர்கள் ஜெயலலிதா மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர் கனகராஜ் என்று அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
கனராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வர், கனராஜின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கனகராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டார். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர் என புகழாரம் சூட்டினார்.
Discussion about this post