எதிர்க்கட்சியினர் அமைத்தது சந்தர்ப்பவாத கூட்டணி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வார காலமாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக, திருச்சியில் காந்தி மார்க்கெட் மற்றும் புத்தூர்ரோடு, ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், உய்யகொண்டான் திருமலை, கந்தர்வகோட்டை, திருவெறும்பூர் ஆகிய இடங்களில் முதலமைச்சர் பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப்போது பேசிய முதலமைச்சர் மக்களுக்குச் சேவை செய்ய, தமிழகத்திற்கு தேவையான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது அதிமுக கூட்டணி என்றார்.
Discussion about this post