பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாத அதிகாரிகளை பனி நீக்கம் செய்யவேண்டும்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி சண்முகாநதி அணை அருகே ஸ்ரீசண்முகநாதன் பாலதண்டாயுதபாணி கோயிலில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் ஸ்ரீசண்முகநாதன் கோயில் அறக்கட்டளை சார்பில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையே கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி, இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களை வனத்துறை அலைக்கழிப்பதாகவும், நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் நடப்பதாகவும் கடுமையாக சாடினார். பொதுமக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரிந்த அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் என்றும் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காத அரசு அலுவலரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Exit mobile version