கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

விழுப்புரத்தில் 50 ஆண்டுகளாக வழிபாடு நடத்தி வரும் கோவில்களை இடிக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழுரெட்டி பகுதியில் இருக்கும் கோயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறி நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கோயிலை இடிக்க வந்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும், பட்டா வழங்குவதாக கூறினர். ஆனால் தற்போது வீடு மற்றும் கோயில்களை இடித்து குழந்தைகளோடு சாலையில் நிற்கதியாக நிற்க வைக்க திமுகவினர் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Exit mobile version