2019 பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிடுவதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை துவக்கியுள்ளன. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக நிதின் கட்கரி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, பிரதமர் மோடிக்கு பதிலாக பிரதமர் வேட்பாளராக தான் போட்டியிட வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். தற்பொழுது உள்ள பொறுப்பில் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினார்.