சாலை விபத்துகளை குறைப்பதில் முன்னுதாரணம் – தமிழக அரசுக்கு நிதின் கட்கரி பாராட்டு!

தமிழகத்தில் சாலை விபத்துகளும், அது தொடர்பான மரணங்களும் 25 சதவீதம் குறைந்திருப்பதற்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

ஆந்திராவில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும், சுமார் ஒன்றரை லட்சம் பேர் பலியாகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். எனவே மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு சாலை விபத்துகளையும், அது தொடர்பான மரணங்களையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்துள்ள சிறப்பை பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். விபத்துகளை குறைப்பதற்கான நடவடிக்கை மற்றும் திட்டமிடலில், மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version