வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மோட்டார் வாகன மசோதா – நிதின் கட்காரி

அமைச்சரவை குழுவின் அனுமதிக்குப் பிறகு, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆனால், மசோதாவுக்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து அது தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டதாகவும் நிதின் கட்காரி கூறினார். தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு மாநிலங்களவையில் மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அதன் மீதான விவாதம் இன்னும் நிறைவடையாமல் உள்ளதாக கூறிய அவர், இந்த மசோதாவுக்கு அமைச்சரவை குழு அனுமதி அளிக்க தயாராக உள்ளதாகவும், அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் கூட்டத் தொடரிலேயே மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

Exit mobile version