காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஏற்கனவே காங்கிரஸ் நகர்புற நக்சல்கள் மீதான சட்டங்களை தளர்த்துவாக வாக்குறுதி அளித்திருப்பதையும் சுட்டிக் காட்டினார். இந்திய விமானப்படை பாலக்கோட்டில் நடத்திய தாக்குதல் மக்களின் நினைவில் நீங்காமல் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கை, ஊழல், தீர்மானம் மற்றும் சதி ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வை மக்களவைத் தேர்தல், கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். காங்கிரசாரைப்போல அவர்களின் தேர்தல் அறிக்கையும் ஊழலாலும், பொய்களாலும் நிரம்பி உள்ளதாக பிரதமர் குற்றம்சாட்டினார். அது போலித்தனமான ஒரு ஆவணம் என்றும் அவர் விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சி போன்று பாஜக ஒரு போதும் தவறான வாக்குறுதிகளைத் தராது என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.