நீலகிரி மாவட்டத்தில், மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பந்தலூரில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக பந்தலூரில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் பலர் வீடுகளை இழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களை சமுதாயக் கூடத்தில் மாவட்ட நிர்வாகம் தங்க வைத்திருந்தது.
இந்நிலையில், முதலமைச்சரின் உத்தரவின்படி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து செய்ய உத்தரவிட்டார். மழையின் தாக்கம் குறைந்து காணப்படுவதால், சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மாவட்டம் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கைக்கு பொதுமக்களும், விவசாயிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.